' இந்த சாமர்த்தியத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, எங்கே ஆரம்பத்துல என்ன சொல்லுவா சொல்லு' என்றாள் ஜானகி. 'எத்தன வாடி கேப்பெள், இன்னிக்கு டென் தௌசந்து டைம்ஸ் சொல்லிட்டேன்' என்று சற்று அலுத்துக் கொண்டு சற்று குரலை செரி செய்து கொண்டு ' வணக்கம் இந்த மழலை கூத்தாடி நிகழ்ச்சியை பார்க்கும் அனைவருக்கும் வணக்கம், என் பெயர் கீர்த்தனா' என்று கூறிவிட்டு 'கண்ட நாள் முதலாய்' பாடலை பாடி முடித்தாள் .'நன்னா பாடற இதே மாறி அங்கேயும் பாடு ' என்று கூறி பேத்தியை முத்தமிட்டாள் பாட்டி. 'ஐயோ பவுடர் கலயறது' என்று கூறி மீண்டும் பவுடர் அப்பினாள் ஜானகி. 'இதெல்லாம் பத்தாது,maththa குழந்தைங்க டிவி ல பாடறதா பாதிருகேலோன்னோ . இன்னும் கொஞ்சம் பிருகா போட்டு அங்கங்க improvise பண்ணி low notes எல்லாம் கரெக்ட் ஆ பாடணும். vibrato எல்லாம் சரியா விழலை , சுருதி சரணத்துல கொஞ்சம் அடம் பிடிக்கறது ' என்றாள். 'என்னடி இவ என்ன எம் எஸ் சுப்புலக்ஷ்மியா , நீ சொல்றது உனக்கு மொதல்ல புரியறதா?' என்று கேட்டாள் பாட்டி. 'எல்லாம் கேள்வி ஞானம் தான், டிவி ல உன்னி கிருஷ்ணன் சொல்றாரே' என்றாள் ஜானகி.
சுந்தரம் அழைத்து வந்த taxi யில் மேக்கப் சாமான்களையும், சீரகத் தண்ணீர் பர்லே வாட்டர் போன்ற சமாச்சாரங்களையும் எடுத்துக் கொண்டு AVM studio வய் நோக்கி விரைந்தனர். AVM ஸ்டுடியோவில் பங்கேற்பாளர்கள் பலர் முன்னரே வந்து அமர்ந்திருந்தனர், சுந்தரம் Q வில் நின்று டோக்கன் வாங்கினான். 210 ஆம் எண் தான் அவர்களுக்கு கிடைத்தது. வாங்கிய பிறகு அனைவரும் ஒரு பெரிய ஹாலிற்கு சென்றனர். அங்கிருந்த குழந்தைகள் நறுமுகையே முதல் பெட்டரப் பாடல் வரை பல தரப்பட்ட பாடல்களை ஜபித்துக் கொண்டிருந்தனர். அந்த vibration ஜானகியை பேஜார் ஆகியது. அங்கிருந்த மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளி ஒருவர் ஏறி ' ஹாய் auditions are gonna start soon. Ten ten ah we will call the kuzhanthais. அவங்க பாடி mudichathum judges 5 minutes la results சொல்வாங்க. கூட வந்தவங்க can also go உள்ளார ' என்று செந்தமிழையும் ஆங்கிலத்தையும் உருட்டி பீடா போட்டதுபோல் பேசினார் . ' என்னடா இவளுக்கே இன்னும் மழலை போகலையே' என்ற சுவாமிநாத ஐயரின் ஜோக் அப்பொழுது எடுபடவில்லை .
காத்திருந்து காத்திருந்து மணி மதியம் 2 ஐ தொட்டது. கீர்த்தனாவை ஒரு பக்கம் தூக்கம் மறு பக்கம்ஜனகியும் தள்ளிக் கொண்டிருந்தனர். '190 - 200' என்றவுடன் ' ஹே ஹே அடுத்து நாம தான், பாடு எல்லாம் ஞாபகம் இருக்க்கா ?' என்றதற்கு பலமாக தலை ஆட்டினாள் கீர்த்தன. 'இந்தா ஜீரகத் தண்ணி குடி' என்று ஜானகி கொடுத்தாள். 'அம்மா பசிக்கிறது' என்றால் கீர்த்தன, 'கொஞ்சம் பொருடிம்மா, முடிஞ்சதும் சோலா பூரி வாங்கித் தரேன்' என்று அவளை சம்மதனப் படுத்திவிட்டு போட்டி நடக்கும் அரங்கத்திற்கு அனைவரும் சென்றனர். '200 - 210' உள்ளே வாங்க என்றதும் உள்ளே சென்றனர்.
குழந்தையை தனியே அனுப்பிவிட்டு பார்வையாளர்கள் இடத்திற்கு மற்றவர்கள் சென்றனர். பங்கேற்பாளர்கள் வந்து பாட ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதன் முன் பச்சை சிவப்பு என இரு நிற விளக்குகள் அமைக்கப் பட்டிருந்தது. மேடைக்கு முன் நடுவர்களாய் மூவர் அமர்ந்திருந்தனர். 'யார் இவ எல்லாம்' என்று ஜானகி சுந்தரத்திடம் கேட்டால். 'இவாளத் தெரியாத நோக்கு, அதோ வலப் பக்கம் இருக்காரே அவர் தான் மியூசிக் டைரக்டர் முருகவேல். இப்போகூட கஸ்மாலம், அமிஞ்சிக்கரை அம்சான்னெல்லாம் படத்துக்கு மியூசிக் போட்டர். நடுவால் ஜடை எல்லாம் போட்டுகுட்டு இருக்கறவர் பேர் கோல்டி. இங்கிலிஷா தமிழன்னே வித்தியாசம் தெரியாத மாதிரி ராப் எல்லாம் பாடுவார். 'do u wanna do காதல், இங்க வராத நான் ரொம்ப lethal' அப்பிடின்ன ஒரு ஹிட் பாட்டு போட்டிருக்கார். மூணாவது ஆளு..' என்றதும் ஜானகி அவனை நிறுத்தினாள். 'எப்பிடியும் தெரியப் போறது இல்லை விட்டுருங்கோ' என்றாள்.
போட்டி தொடங்கியது, 201 என்று அழைத்தும் சிறுவன் ஒருவன் மேடை ஏறி 'தத்தை தத்தை' என்று பாடி பாடினான். இது போல 208 வரை முடிந்தது. மூவர் தேர்வாகி இருந்தனர், நிச்சயம் அவர்களை விட கீர்த்தனா சிறப்பாக பாடுபவள் என்பது ஜானகியின் தாழ்மையான கருத்து. 209 என்றதும் மேடை ஏறிய சிறுமி 'கண்ட நாள் முதலாய் எனப் பாடியாதும் ஜானகி அண்ட் co மற்றும் கீர்த்திக்கு பகீர் என்றது. 'கீர்த்தி உன்னைய பார்த்துண்டு இர்ருக்க, நீ தைரியமா இருந்தா தானா அவ பாடுவா' என்றார். ஜானகியும் 'பயமில்லை தைரியமாப் பாடு' என்பது போல் சைகை செய்தாள்.
பாடிய க்சிருமிக்கு பச்சை விழாக்கு எறிந்தது. கீர்த்தி மேடை ஏறி 'கண்ட நாள் முதலாய்' என்றவுடனே 'stop stop' என்றார் கோல்டி. 'she sang it just now la, வேற paattu ஏதாவது பாடேன்' என்றார். 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' பாடலில் சில வரிகளை பாடினால் கீர்த்தி. 'ok unakku fast ah எதோ தெரியுமா' என்று கேட்டார் முருகவேல். ' ஓடத் தெரியும்' எனப் படார் என பதில் சொன்னாள் கீர்த்தி. சுவாமிநாத ஐயர் மட்டும் சிரித்தார். 'இல்லம்மா fast ah பாத்து எதோ தெரியுமா, 'மலை மலை' அது மாதிரி' என்றார் முருகவேல். 'தெரியாது' எனக் கூறி தலை ஆடினால் கீர்த்தி. 'கீர்த்தனா we are looking for exuberance, showmanship, life, energy etc etc. got it? ' என்ற மூன்றாவது நடுவர். கீர்த்தனா பேய் அடித்தார் போல் நின்றால் கீர்த்தனா. சிவப்பு விழாக்கு எறிந்தது.
கீர்த்திக்கு அழுகை பீறிட்டு வந்தது , ஜானகி அவளை தூக்கிக் கொண்டு வேகமாய் வெளியேறினாள். தாய் செய் இருவரையும் கேமரா ஏந்திய ஒருவரும் நிகழ்ச்சி தொகுப்பாளியும் துரத்தி துரத்தி bytes பிடிக்க முயற்சி செய்தனர். ஜானகி தன் வயித்தெரிச்சல் அனைத்தையும் கேமரா முன் கொட்டினாள். எப்படியோ கேமரா விடமிருந்து தப்பி அனைவரும் வெழியே வந்தனர்.
வெளியே வந்து சுதாரித்துக் கொள்ளவே பத்து நிமிடங்கள் ஆயின. 'அநேகமா இதை program advertisement la போட்டு background music எல்லாம் போடுவான்னு நினைக்கிறேன்' என்றார் சுவாமிநாத ஐயர். 'நீங்க இருந்தா ஞாபகப் படுதிக்கிட்டுருப்பீங்க, பொய் சாப்பாடு வாங்கிட்டு வாங்கோ' என்று அவரை அனுப்பி வைத்தார் பாட்டி.
சாப்பிடும்போது 'இவளுக்கு என்ன செய்யணும்னே தெரியல, எவ்வளவு ஆசை ஆசையா வந்தேன்' என்று தொடர்ந்து புலம்பினாள் ஜானகி. நடந்து முடிந்தது என்னவென்றே தெரியாதது போல் புள் தரையில் பட்டாம்பூச்சி ஒன்றை துரத்திக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.



