நடிகர்கள் என்றவுடனே நினைவிற்க்கு வரும் ஒரு முக்கியமான விஷயம் ரசிகர் மன்றங்கள். திரைப்படம் வெளியானதும் cutout வைத்து ,கொடி ஏற்றி , பால் அபிஷேகம் செய்து , சூலம் ஏற்றி அங்கப் பிரதர்சனம் செய்து அப்பப்பா யார் தொடங்கியதோ தெரியவில்லை சமீபத்திய தர்மபுரி மாவட்டட தலைமை சாந்தனு ரசிகர் மன்றம் வரை ஒவ்வொரு நடிகனுக்கும் பற்பல ரசிகர் மன்றங்கள் தமிழகம் முழுவதும் உள்ளன . இன்று இணையதளத்தின் மூலம் ரசிகர் மன்றங்கள் ஒரு புதிய உருவம் பெற்றுள்ளன . குறிப்பாக ஆர்குட்டில் ஏதேனும் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் நம்முள் பலர் அங்கதனரக நிச்சயம் இருக்கிறோம் . நானும் சற்று நாட்களுக்கு முன் வரை எனக்கு மிகப் பிரியமான இரு நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனின் ஆர்குட் ரசிகர் மன்றங்களில் அங்கத்தினராய் இருந்தேன் . இவ்விரண்டும் 50000 கும் மேல் ரசிகர்களைக் கொண்டவை . இவற்றில் நான் ஒரு முறை கூட பங்கு கொண்டதில்லை என்றபோதும் அவற்றில் ஏனோ தொற்றிக் கொண்டிருந்தேன் . சமீபத்தி இவற்றில் விவாதிக்கப்படும் விஷயங்களை கவனித்தபோதுதான் தெரிந்தது ரஜினியின் communitykku 'anti கமல்' community என்றும் கமலின் கம்ம்யுநிட்டியை 'anti ரஜினி ' community என்றும் பெயரிடிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் என்று. ரஜினி communityin அங்கத்தினர்கள் கமலையும் கமல் communityin அங்கத்தினர்கள் ரஜினியையும் பல எழுத முடியாத பெயர்களைக் கொண்டு பிரியமாக அழைக்கின்றனர் . குசேலன் திரைப்படம் வெளியான அன்று ரஜினி communityil ஒருவர் எழுதியிருந்தார் 'ஒரே வார்த்தைல சொல்லனும்னா படம் அற்புதம் ' என்று . சாயம் வெளுத்து படம் ஊத்தி மூடியதை அடுத்து ஒருவர் கேட்டிருந்தார் குசேலனை ரஜினியின் தோல்வி என்று எடுத்துக் கொண்டால் பார்த்தாலே பரவசம் திரைப்படத்தை கமலின் பெரிய தோல்வி என்று ஏற்க வேண்டும் என்று . சமீபத்தில் தசாவதாரம் நூறு நாட்களை கடந்ததை அடுத்து ஆல்பர்ட் theatreil உள்ள ரஜினியின் சுவரொட்டிகள் மீதெல்லாம் கமலின் சுவரொட்டிகள் ஒட்டியதாக ஒருவர் கமல் communityil மார்தட்டிக் கொள்ள , அதற்க்கு இன்னொருவர் 'சபாஷ் எதிரியின் கோட்டைக்கே சென்று கொடி நாடுவிட்டோம்' என்று பெருமிதம் கொண்டார் . இதை அடுத்து போதும்டா சாமி என்று இரண்டு communitygalilirunthum வெளியே வந்து kamal+rajini என்று community search கொடுத்த போது ajith = rajini+kamal என்ற ஒரு community கிடைத்தது , சேரலாம்னு இருக்கேன்.
சமீபத்தில் 'ராமன் தேடிய சீதை' படம் பார்க்க சென்ற போது theatrein வெளியே 'யதார்த்த நாயகன்' சேரன் ரசிகர மன்ற banner ஐ பார்க்க நேர்ந்தது , அப்போது ஒரு சிந்தனை தோன்றியது, படம் முடியும் போது சேரனை சுற்றி படத்தின் இயக்குனர் மற்றும் ஆப்ரிக்கா உடை அணிந்த நடனக் கலைஞர்கள் சேர்ந்து ஆடிப்பாடுகிறார்கள் ...என்ன பாட்டா? .. யதார்த்த நாயகனே டன் டன் டன் டன் டன் ..