
மழை என்றால் மேலிருந்து தண்ணீர்
நிற்காமல் வருமாம்
அந்த மாயத்தை இதுவரை
கண்டதில்லை நானும்
ஊரிலுள்ள தண்ணீர் குழாய்கள் அனைத்தும்
வற்றிய போதும்
இன்றுவரை வற்றவிலை என் தாயின்
கண்ணீர் குழாய்கள்
வானம் பார்த்து வானம் பார்த்து
சலித்த எங்கள் நிலங்கள்
மாறி வருகின்றன எங்கள்
விவசாயிகளின் இடுகாடுகளாய்
எங்கள் மனங்களைப் போல்
எங்கள் நிலஙளும் வெடி
வைத்தார் போல்
பிளந்து கிடக்கின்றன
விவசாயிகள் விவசாயத்தை மறக்கும் நிலை
ஏருகளில் இரும்பெல்லாம் துருபிடிக்கும் நிலை
நம்பிக்கையற்றுப்போய் பயிர்கள்
வானைக் காணமறுக்கும் நிலை
பல ஊர்களுக்கு அன்னமிட்ட
எங்கள் கிராமம்
இன்று நிற்கிறது திருவோடு
ஏந்தி
உழவர் திருநாளன்றும் இரண்டு
உழவர்கள் த்ற்கொலை
மாட்டுப் பொஙலன்றும்
பலமாடுகள் பட்டினி
எங்கள் மாடுகளுக்கு கொம்புகள்
கூட சுமையாயின
ஜல்லிக்கட்டு நடத்தியிருந்தால் அவைகளே
போரட்டம் நடத்தியிருக்கும்
நீர் வசதி இதோ வரும்
அதோ வரும் எனக் கூறி
வந்து சென்றன
இரு தேர்தல்கள்
ஆண்டிற்க்கிருமுறை மழை வர
யாகம் செய்தும் தணியவில்லை
எஙள் நிலங்களின்
தாகம்
மரம் வளர்த்தால் மழை
பொழியுமாம்
மரம் வளர்க்க மழை
வேண்டுமே!!
ஊருக்கு அப்பால் இருக்கிறது
தண்ணீர் கிணறு ஒன்று
நீர் கொண்டு வரும் வழியிலே
பாதி குடித்திடுவான் பகலவன்
தண்ணீரை சிக்கனமாய்ப் பயன்படுத்துவதில்
வல்லவர்கள் நாஙள்
காகஙளும் எங்கள் குளியலைக்
கண்டால் வாயைப் பிளக்கும்
எங்களை வைத்து மனித உடலின்
எலும்புகளை எண்ணி விடலாம்
காற்றை மட்டும் சுவாசிது
வாழும் ஜீவஙள் நாஙள்
நாளிற்க்கிருமுரை வானையும் மண்ணையும்
வணங்கிய எங்கள்
தாதாவிற்க்கு கூன் விழுந்தது
தான் மிச்சம்
அவர் மாண்டபொது
அவருடனே மாண்டன
நிலத்திலும் விவசாயத்திலும் இருந்த
எங்கள் நம்பிக்கை
நிலத்தை ஜமீந்தாரிடமும் மாடுகளை
கசாப்புக் கடையிலும் விற்றோம்
மிஞ்சியிருந்த எஙள் சொத்தை மூட்டைக் கட்டினோம்
ஒரு சிறிய மஞ்சள் பையில்
மாடுகளை விற்ற நாஙள்
ஆயத்தமானொம்
அடி மாடுகளாய் வேலை
செய்ய
பேருந்திற்காக காத்திருந்தபோது ஓர்
பெரும் ஓசையைக் கேட்டேன்
என் வாழ்வில் முதல் முறையாக
வானிலிருந்து நீர் வடிவதைக் கண்டேன்
மழையைக் காணமாட்டேன் என
தன் இரு கண்களையும்
பொத்திக் கொண்டார் என்
அப்பா
என் தாயின் முகத்தை மழை
நனைத்ததில்
அவள் கண்ணீர் எனக்குத் தெரியாமல்
போனது
திரும்பி செல்ல எங்களிடம்
நிலமில்லை மாடுகளில்லை
உடலில் வலுவில்லை முக்கியமாக
விவசாயத்தில் நம்பிக்கையும் இல்லை
ஏற்கனவே நிறம்பியிருந்த பேருந்தில்
நாங்களும் ஈக்களாய் தொற்றிக் கொண்டோம்
ஒழுகும் மழை நீரைக் கையிலேந்தி
விளையாடிய தம்பியை அரைந்தார் அப்பா
நடத்துனரிடம் நனைந்த ரூபாய்
நோட்டுகளைக் கொடுத்து
எவ்வளவு தொலைவு செல்ல முடியுமோ
செல்லச் சொன்னார்
தண்ணீர் பஞ்சத்திற்க்கு அஞ்சி
தஞ்சம் புகுந்த
புது ஊரில் ஒரு பாட்டில்
நீரின் விலை பத்து ரூபாய்