Friday, February 15, 2008

மனிதர்கள் ஜாக்கிரதை


அன்று முகுர்த்த நாள் என்பதால் சைதாப்பேட்டை பஜாரில் வழக்கத்தை விட மிக அதிகமாகவே மக்கள் கூட்டம் காணப்பட்டது, அங்குள்ள பூக்கடைகளில் பலர் மாலைகளும் பூக்களுமாக வாங்கிக் கொண்டிருந்தனர். முத்து மிக மௌனமாக நடப்பவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் . அவன் பஜாருக்கும் அண்ணா சாலைக்கும் இடையில் உள்ள உட்லான்ட்ஸ் ஹோடேலில் தங்கியிருந்தான். அன்றுடன் அவன் அங்கு வந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தன. இதற்கு முன் முத்து மேற்கு சைதையில் உள்ள ஒரு செல்வந்தர் வீட்டில் சில வருடங்களாக பணியற்றிக்கொண்டிருந்தான் . ஆரம்ப காலத்தில்அவன் முதலாளி அவனை தன் சொந்த பிள்ளை போலவே பாவித்தார் . நாளடைவில்வியாபரத்தில் அவர் சந்தித்த சரிவுகள் அவர் குணத்திலும் பிரதிபலிக்கத்தொடங்கின . மூர்க்கரானர், தன் கோபத்தை வெளிக்கொண்டுவர திசை அறியாமல் அதனை முத்துவின் மீதும் பிறர் மீதும் காட்டத் தொடங்கினார் .தினம் அலுவலகத்திலிருந்து வந்த பிறகு முத்துவை பெல்ட்டினால் அடிப்பதும் ,அவன்மேனியில் சிகரெட்டினால் சூடு போடுவதும் அவர் கோபத்தை தணிக்க உதவின.கேட்பார் யாருமிலாமல் முத்து தன் வலிகளைப் பொறுத்துக்கொண்டு ஒரு விடியளுக்காக் காத்திருந்தான்.

ஒரு நாள் எதிர் பிளாட்டில் புதிதாக லக்ஷ்மி என்ர்ரூருவால்l வேலைக்குசேர்ந்திருபதை அறிந்தான். தன் முதலாளி பணிக்கு சென்ற பின் அவளைசந்திப்பது அவனுக்கு ஓர் மன அமைதியை கொடுத்து. தன்னை போல் லக்ச்மியும்பல கொடுமைகளுக்கு ஆளாகிறாள் என்பதை அறிந்தான் .செய்வதறியாது இருவரும்தங்கள் நாட்களை கடத்தினர் . நான்கு நாட்களுக்கு முன்னர் முத்துவும் லக்ஷ்மயும் வழக்கம்போல்சந்தித்து பேசிக்கொண்டிருப்பதை முத்துவின் முதலாளி பார்த்தான். தன் முழுபலத்துடன் முத்துவின் வயிற்றில் ஓர் உதை உதைத்தான். முத்து கதறியபடிஅருகில் இருந்த சுவற்றில் மோதி கீழே விழுந்தான் .அவன் அலறல் கேட்டு எதிர்வீட்டாரும் வெளியே வந்தனர் .அவர்களைப் பார்த்து முத்துவின் முதலாளி 'இந்தகன்றாவிக்குத் தான் இத்தைஎல்லாம் இட்டாந்தீகளா?' என்று லக்ஷ்மியைசுட்டிக்காட்டியபடி கேட்டான் .'மருவாதயா ஊட்டுகுள்ளேயே பூட்டிவெச்சுக்குங்க ,இல்லாங்காட்டி கலீஜா பூடும் ' என்றான் .அதற்குலக்ஷ்மியின் முதலாளி 'அங்க மட்டும் ரொம்ப ஒழுங்கு ,மூட்டுப்போட பேமானி'என்றார் .லக்ஷ்மியை பார்த்து 'வா சனியனே ,உன்னால நான் கண்ட கசுமலதுகிடஎல்லாம் பேச வேண்டிகிது ' என்று கோரி அவளை தரதரவென விடுகுள் இழுத்துச்சென்று கடவை பூட்டினர். நான்கு நாட்களாக எந்த வித பயமுமில்லாமல் நிமடியாக தன் நேரத்தைமுத்து கடத்தினான் .காலை ஒன்பது மணியானது ,எதிரில் உள்ள மீன்மார்க்கெட்டில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.அங்கிருந்து இரண்டு கட்டங்கள் தள்ளி இருந்த திருமணப் பதிவு நிலையத்தில்பல புதுமணத் தம்பதியினர் வண்டு தங்கள் திருமணத்தை பதிவு செய்து,எதிர்காலக் கனவுகள் கண்ணில் மினியபடி உற்சாகமாக திரும்பி சென்றுகொண்டிருந்தனர் . இதைப் பார்த்தும் லக்ஷ்மியின் நினைவு முத்துவிற்கு வந்தது .பல முறைஅவர்கள் இருவரும் இணைந்து தனியே நிம்மதியாக வாழ்வது குறித்து பேசியதருணங்கள் அவன் நினைவிற்கு வந்தன .லக்ச்மிக்கு கடந்த நான்கு நாட்களில்என்ன நடந்திருக்குமோ என்ற எண்ணம் அவனை வருத்தியது .எவ்வாறாவது அவளைஅழைத்து வர வேண்டும் என முடிவு செய்து அவன் வசித வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினான் . ஜீனிஸ் ரோடு வழியாக ரயில்வே கேட்டைத் தாண்டி நடந்தான் .ரோட்டில்எச்சில் உமிழ்வது சைதை மக்களின் பிரதான பொழுதுபோக்கு .மிக கவனமாகஅவற்றின் மீதெல்லாம் கால் படாமல் நடந்து இறுதியில் தன் வீட்டை அடைந்தான்.தன் முதலாளியின் கார் இல்லத்தை கண்டன் .வாட்ச்மன் வழக்கம் போல் பக்கத்துகடைக்காரனிடம் பேசிக்கொண்டிருந்தான் .மெதுவாக சத்தம் போடாமல் ,தன்னுடையஎதிர் பிளாட்டின் திறந்த கதவினுள் நுழைந்தான் .அங்கு லக்ஷ்மி ஒரு கயிறால்கட்டப் பட்டிருந்தாள் ,அவளது அழகான முடி பல இடங்களில்வெட்டப்பட்டிருந்தது .அவளின் இந்த நிலை முத்துவின் கண்களை தெப்பம் ஆக்கின. முத்துவைக் கண்டு லக்ஷ்மி எழ முயன்றாள் ஆனால் கயிறுகள் அவளைத்தடுத்தன .முத்து விரைவாக முடிச்சுகளை அவிழ்த்தான் .வீட்டின்அறையிலிருந்து யாரோ வருவது போன்ற சத்தம் கேட்க இருவரும் பிளாட்டை விட்டுவெளியே சென்றனர் .வாட்ச்மன் இன்னுமும் பேசிக்கொண்டிருந்தான் .ஏதோ சத்தம்கேட்டு முத்து திரும்பிப் பார்த்தான், அவன் முதலாளியின் வீட்டுbalconyill இருந்து புதிதாக ஒரு நாய் எம்ப முயன்று கொண்டிருந்தது .அந்தஅப்பர்ட்மென்ட் கேட் இல் இருந்த 'நாய்கள் ஜாக்கிரதை ' என்ற வாசகமும்அதற்கான படமும் கொண்ட பலகையைக் பார்த்து ஏளனமாய் சிரித்தான் முத்து.வடுக்களை மனதிலும் உடலிலும் சுமந்தபடி எதிர்காலத்தை நோக்கி அந்த இரண்டுநாய்களும் சென்றன.

No comments: